ஆதிகுணசேரனின் வருகை... பீதியில் குடும்பத்தினர்: ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனை இன்று எதிர்பார்க்கலாம் என்ற வகையில் இன்றையப் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
ஆதிகுணசேரனின் வருகை
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேரகனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென உயிரிழந்ததால் அவரின் இடத்தை நிரப்ப முடியாமல் சீரியல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
கொஞ்ச நாட்களாக மாரிமுத்து நடித்த சில பழைய காட்சிகளை எடுத்து சமாளித்து வந்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆதிகுணசேகரன் மீண்டும் வருவார் என்று வெறும் கால்களைக் காட்டி இழுத்துக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சீரியலில் இன்று ஆதிகுணசேகரன் வருவார் என்றும், அவர் வந்தால் நடக்கப் போகும் எல்லாவற்றும் தயாராக இருக்க வேண்டும் என்று தயாராகும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |