எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் மகனா இது? தற்போதைய குடும்ப புகைப்படம்
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை கனிகா தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
நடிகை கனிகா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்தியுள்ளார்.
அஜித், மாதவன் போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடித்த இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகின்றார்.
இதில் குணசேகரன் மனைவியாக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் கடந்த 2008ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒருமகனும் உள்ள நிலையில், மகனுடன் அவ்வப்போது புகைப்படம் மற்றும் காணொளியினை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் கனிகா தனது மகனுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் நடிகை கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |