ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு... எதிர்நீச்சல் சீரியல் முடியுறதுக்கு என்ன காரணம்?
எதிர்நீச்சல் சீரியல் வரும் 8ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி பிரபல ரிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் எதிர்நீச்சல்.
இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சீரியல் ஜுன் மாதம் 8ம் தேதி முடியவுள்ள நிலையில், இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரனாக நடித்து அசத்திய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பின்பு இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைத்துள்ளனர். ஆனால் மாரிமுத்து நடித்த போது இருந்த வரவேற்பு தற்போது இல்லை.
சீரியலின் இயக்குனர் திருச்செல்வத்தை பொறுத்தவரை தான் விரும்பியவாறு கதையை கொண்டு செல்வார். ஆனால் சேனலில் குறித்த சுதந்திரம் முதலில் இருந்ததாகவும், தற்போது கதையை மாற்றக் கோரியும் சேனல் தரப்பு கூறியுள்ளது.
மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்றாலும், அனைவருக்கும் சரியான கதாபாத்திரத்தினையே திருச்செல்வம் கொடுத்திருந்தார்.
சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றக்கோரி கூறியதாகவும், அதற்கு இயக்குனர் சம்மதம் கூறவில்லை என்றும் கூறப்படுகின்றது.
கடைசியில ஒரேயொரு மின்னஞ்சல் சேனல் தரப்பில இருந்து திருச்செல்வத்துக்குப் போக, அன்று இரவே குறித்த சீரியலை முடிப்பதற்கு முடிவு எடுத்துள்ளாராம்.
குறித்த சீரியலில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களுக்கு மறுநாள் படப்பிடிப்பிற்கு வந்த போது 'நாளை கடைசி நாள் ஷூட்டிங்' என்ற தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |