எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா: வெளியிட்ட பரபரப்பு காணொளி!
நடிகை கனிகா எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெல்லியில் தெரு நாய்களுக்கு ஏற்படும் சோகத்தை குறித்து பேசியுள்ள பரபரப்பு காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
இப்படத்திற்கு பின்னர் படிப்பை முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களை கூட தவிர்த்திருக்கின்றார்.
சிறிய இடைவேலைக்கு பின்னர் மீண்டும் சேரனின் ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறு போன்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றாரர். பின்னர் சினிமா பக்கமே காணவில்லை.
2008ம் ஆண்டு இவருக்கு ஷியாம் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் கனிகா சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி என்ற பெயரில் நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதன் முதல் பாகத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகத்திலும் ஈஸ்வரியாக நடித்து வந்தார்.
கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் இந்த தொடரில் இருந்து கன்னிகா வெளியேறியிருந்தார்.அதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது, டெல்லியில் தெரு நாய்களுக்கு ஏற்படும் சோகத்தை குறித்து பேசி ஒரு காணொளியை தனது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |