எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக களமிறங்கிய நடிகை யார்? கதையில் திடீர் திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரிக்கு பதிலாக தற்போது பொம்மலாட்டம் சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீஜா புதிய ஈஸ்வரியாக களமிறங்கியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. குணசேகரனை பழிவாங்க பெண்கள் என்னதான் திட்டம் போட்டாலும் அவர்களை அடக்கி வீட்டுக்குள் வைத்து விடுகின்றார்.
தற்போது விசாலாட்சி தனது மகன்களையே எதிர்த்து நிற்கின்றனர். மேலும் தனது முழு ஆதரவையும் தனது மருமகள்களுக்கு கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி தற்போது கண்விழித்து வீட்டிற்கு வருகின்றார். ஈஸ்வரியின் வருகை குணசேகரன் கூட்டத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜனனியின் கருவை அளிப்பதற்கு பூஜையை ஏற்பாடு செய்த குணசேகரன் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ஈஸ்வரியாக யார் வருகின்றனர் என்று மக்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.
தற்போது கனிகாவிற்கு பதில் ஈஸ்வரியாக பொம்மலாட்டம் சீரியலில் நடித்த ஸ்ரீஜா களமிறங்குகின்றார். இவரது என்ட்ரி பழைய விடயங்களை மறந்துவிட்டவர் போன்று காணப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |