எதிர்நீச்சல் நடிக்கும் அன்புக்கரசி யார் தெரியுமா? இவ்ளோ பிரபல நடிகையா இவங்க
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் அன்புக்கரசி பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் இந்த சீரியலில் நடிக்க முன்னர் பெரும் திரையில் நடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குணசேகரனின் மகன் தர்சனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் நடக்க பல விடயங்கள் நடந்து வருகின்றது.
ஒரு பக்கம் இந்த திருமணத்தை நிறுத்த வீட்டின் மருமகள்கள் போராடி வருகின்றர். ஆனால் அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அன்புக்கரசியின் சினிமா பயணம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல் அன்புக்கரசி
எதிர்நீச்சல் தொடரில் வரும் அன்புக்கரசி முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால், பல திருப்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார். தற்போது கதை முன்னேறுவதில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க அன்புக்கரசி திரைப்படம் நடித்துள்ளார். இந்த படம் சத்யா என்பதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்திய தமிழ் மொழி மர்மத் திரைப்படமாகும் .
தெலுங்கு திரைப்படமான க்ஷணம் (2016)இன் அதிகாரப்பூர்வ ரீமேக் , இந்த படத்தில் சிபி சத்யராஜ் , ரம்யா நம்பீசன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர் .
இதில் ரியா பேபியாக எதிர்நீச்சல் அன்புக்கரசியான ஷெரின் தாரா நடித்துள்ளார். இந்த படம் வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |