பிக்பாஸ் பதிலடி கொடுத்த எதிர்நீச்சல்.. ஜோவிகாக்கு எதிராக கிளம்பும் பூகம்பம்!
பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை சீரியலில் காட்டி வரும் எதிர்நீச்சல் பிக்பாஸிற்கு எதிராக கிளம்பியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோவிகா படிப்பிற்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதற்கு ஆண்டவர் கமலும் சரியான பதிலளிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சையாக கிளம்பியுள்ளது.
விசித்திரா கூறிய கருத்துக்கு சார்பாக பேசிய கமல் அடுத்த நாள் மாற்றுக்கருத்தொன்றையும் பதிவு செய்திருந்தார். ஆனால் இதற்கு இது தான் முடிவு என கூறாமல் இரண்டு பக்கமும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமூகங்களில் எழும் பல கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்து வரும் எதிர்நீச்சல் தற்போது பிக்பாஸிற்கு எதிராகவும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளன.
பிக்பாஸிற்கு எதிராக திரும்பிய சீரியல்
அதாவது,“ பிக்பாஸ் போட்டியாளர் ஜோவிகா படிப்பு வரல அதான் படிக்கல என்ற கருத்தை முன் வைத்துள்ளார். மேலும் அவரின் சூழ்நிலை அப்படி இருந்தது அதனால் படிக்கவில்லை.” இப்படி ஏகப்பட்ட கருத்துக்களை படிக்காமல் போனதற்கு காரணங்களாக முன் வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த எபிசோட்களில் இதற்கு ஒரு மாற்று கருத்தை திருச் செல்வம் அவரின் சீரியலில் வைத்திருந்தார்.
அதில், நேற்றைய எபிசோடில் ரேணுகா, படிப்பின் முக்கியத்துவத்தையும் அதனுடைய ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் ஜான்சி ராணியிடம் புட்டு புட்டு வைத்திருப்பார்.
அத்துடன் படிக்காத உங்களுக்கு எல்லாம் படிப்பின் அருமை எப்படி புரியும் என்பதையும் சொல்லி இருப்பார்.
ஏற்கனவே ஜோவிகாவிற்கு எதிராக பூகம்பம் கிளம்பி வரும் நிலையில் “ எதிர்நீச்சல் சீரியல் அவர்கள் பங்குக்கு சரியான நேரத்தில் பற்ற வைத்து விட்டார்கள்.” என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.