உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரேணுகா, நந்தினி... பரபரப்பு மத்தியில் எதிர்நீச்சலில் நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் மகளை பள்ளிக்கு சேர்க்க வந்த இடத்தில் ரேணுகா பள்ளி குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்த காணொளி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், ஜனனி பெரும் அதிர்ச்சியில் காணப்பட்டதுடன், குணசேகரன் மருத்துவமனை வரை சென்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் அவரது வலது கை செயலிழந்து போனதால், பெரும் கவலையில் காணப்படுகின்றார். மற்றொரு பக்கத்தில் குடும்பத்தில் உள்ள பெண்கள் சொத்தை மீட்டு கொண்டுவருவதாக குணசேகரனிடம் வாக்கு கொடுத்துள்ளனர்.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் ரேணுகா தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வந்த இடத்தில் தனக்கு தெரிந்த பரதநாட்டியத்தை அங்கிருந்த பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இதனால் நந்தினி பயங்கர சந்தோஷத்தில் காணப்படுகின்றார்.
இதனை அவதானித்த ரசிகர்கள், ரேணுகா - நடனம், நந்தினி - சமையல், ஈஸ்வரி - மோட்டிவேசனல் பேச்சாளர், ஜனனி - பிஸ்னஸ் என்று கூறிவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |