குணசேகரன் இருந்தால் இவ்வளவு மோசமா நடந்திருக்காது... புதிய ப்ரொமோவல் கொந்தளிக்கும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மறைவிற்கு பின்பு பல சொதப்பல்கள் அரங்கேறி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஆக்ரோஷமாகிய ஞானம்
நந்தினி, ஈஸ்வரி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் செய்து வந்த வேலையும் வீட்டிற்கு தெரிந்த நிலையில், ஒட்டுமொத்தமாக மறுபடியும் வீட்டிற்குள் அடைபடும் நிலைக்கு குடும்ப பெண்கள் இருக்கின்றனர்.
தற்போது ஞானமும் கோபத்தின் உச்சத்திற்கு சென்று தனது மனைவி ரேணுகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார்.
இந்த புதிய ப்ரொமோ காட்சியை அவதானித்த ரசிகர்கள் குணசேகரன் இருந்திருந்தால் இவ்வளவு மோசமாக நடந்திருக்காது என்று கொந்தளித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |