மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்தார் தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மறைந்த நிலையில் அவரது மனைவி கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது. சமீபத்தில் இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாலியை கழட்டாத மாரிமுத்து மனைவி
நடிகர் மாரிமுத்து உயிருடன் இருக்கும் போது பல நேர்காணலில் மனைவி மற்றும் குழந்தைகள் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சீரியலில் கரடுமுரடாக காணப்படும் இவர் நிஜவாழ்க்கையில் தனது மனைவி மீது வைத்திருந்த காதல் வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது.
கணவரை இழந்த மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சு அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளாராம். ஆம் பொதுவாக கணவர் இறந்துவிட்டால், மனைவி கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை கழற்றிவிடுவார்கள்.
ஆனால் மாரிமுத்துவின் மனைவி, தாலியை கழட்டவே கூடாது என்ற முடிவில் உள்ளாராம். கணவரின் நினைவாக எப்போதும் தாலி கழுத்தில் இருக்க வேண்டும்... தன்னிடம் இருந்தால் தனது கணவரே தன்னுடன் இருப்பதாக உணர்வதாக இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |