Ethirneechal: காஃபியில் ஆரம்பிக்கும் சக்தி, குந்தவை காதல்... ஜனனியின் முடிவு என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி குந்தவைக்கு இடையே காதல் ஆரம்பமாவது போன்று சீரியலில் காட்டப்படுகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் தற்போது வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். மேலும் அவரவர் தொழிலிலும் முன்னேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
சக்தி ஏற்கனவே தனக்கு பார்த்திருந்த பெண்ணுடன் தற்போது பழகி வருகின்றார். இது ஜனனிக்கு தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தெரிந்து கோபத்தில் சத்தம் போட்டுள்ளார்.
இத்தருணத்தில் தர்ஷன் திருமணத்திற்கு மருமகள்களை அழைக்க வந்த மாமியார் குணசேகரனிடம் சென்று அழுகின்றார்.
ஜனனியின் கோபத்தால் அதிருப்தியில் இருந்த சக்தியை குந்தவை ஒரு கப் காபியால் தனது பக்கம் இழுத்துள்ளார். மேலும் சக்தி பருகிய காஃபியை வாங்கி குந்தவையும் குடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |