Ethirneechal: சேர்ந்து வாழ ஆசைப்படும் கதிர்... நந்தினி எடுக்கும் முடிவு என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கதிர் மற்றும் குணசேகரன் இருவரின் மாற்றம் மிகப்பெரிய ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் சதியிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்த ஜனனி, தற்போது கர்ப்பமாக உள்ளதால் வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

குறித்த சீரியலில் யாரும் எதிர்பாராத நிலையில், குணசேகரன் மட்டுமின்றி தம்பிகளின் மாற்றம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அறிவுக்கரசியை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
ஆனால் அறிவுக்கரசி வீட்டைவிட்டு வெளியேற மறுத்து வாசலில் அமர்ந்து தர்ணா பண்ணிக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்களது மனைவியுடன் வாழ்வதற்கு தன்மையாக பேசி வருகின்றனர்.
இவர்களின் இந்த நாடகம் அடுத்து என்ன சதியை கொண்டு வரப்போகின்றது என்பது தெரியாமல், பார்வையாளர்களும், ஜனனி மற்றும் பெண்களும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |