Ethirneechal: ஆயிரம் கோடி கொடுத்தாலும் என் மனைவி கௌரவம் தான் முக்கியம்... கதிர் ஆவேசம்
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தனது மனைவிக்கு நந்தினிக்கு ஆதரவாக பேசி அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். சமீபத்தில் வெளியாகி ப்ரொமோ காட்சியில் கதிரின் கெத்தான பேச்சு பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
அதாவது ஆயிரம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் தனது மனைவி கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கம்பீரமாக பேசி வீட்டு பெண்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |