Ethirneechal: தர்ஷினியை திருமணம் செய்ய கரிகாலன் போடும் திட்டம்! ஈஸ்வரியின் பரிதவிப்பு
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை வீட்டிற்கு அழைத்து வந்த குணசேகரன் ஈஸ்வரியை தர்ஷினியை பார்க்கவிடாமல் அராஜகம் செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
குணசேகரனின் அராஜகம்
குணசேகரன் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகளால் தர்ஷினி கடத்தப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றிய நிலையில், பொலிசார் மீட்டு குணசேகரனிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் காட்டில் ஜீவானந்தம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவரது தற்போது நிலை என்ன என்பது தெரியவில்லை.
ஈஸ்வரிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், வீட்டிற்கு வந்ததும், அவரை தர்ஷினியை பார்க்கவிடாமல் தடுத்து குணசேகரன் அராஜகம் செய்தார்.
தற்போது வீட்டிற்குள் வந்த ஈஸ்வரி தர்ஷினியை கட்டிப்பிடித்து கொஞ்சியுள்ளார். மேலும் கரிகாலன் தர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் பித்தம் தெளிந்துவிடும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |