Ethirneechal: கதையை மாற்றிய குணசேகரன்.. கரிகாலன் போனில் சிக்கிய எவிடன்ஸ்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பக்கம் சாய்ந்த தர்ஷினி நிலையில், இதுவரை கொமடி பீஸாக இருந்த கரிகாலன் தற்போது வில்லனாக மாறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
வில்லனாக மாறிய கரிகாலன்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பதும் தெரியாமல் உள்ளதால் அவரது மகள் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தர்ஷினி குணசேகரன் பக்கம் சாய்ந்துள்ள நிலையில், இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
குறித்த சீரியலில் எப்பொழுதும் கொமடியாக இருக்கும் கரிகாலன் தற்போது வில்லன் தோரணையில் பல செயல்களை செய்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |