துப்பாக்கி முனையில் கரிகாலன்... டிஆர்பி-யை அதிகரிக்க கதையில் மாற்றம்
எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டப்படும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
குணசேகரனாக வேல ராமமூர்த்தி களமிறங்கி 4 நாட்கள் கலக்கிய நிலையில், வேறொரு படப்பிடிப்பிற்காக சென்றதால், சீரியலின் கதையை மாற்றி கொண்டு செல்கின்றனர்.
தற்போது திருவிழாவின் போது அப்பத்தாவின் சொத்து பிரச்சினை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குணசேகரன் தம்பி ஜீவானந்தத்தை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக கரிகாலன் துப்பாக்கி முனையில் சிக்கியுள்ளார். யாரையாவது வைத்து சுவாரசியத்தை கொடுக்க நினைக்கும் சீரியல் இயக்குனர், பல கோணங்களில் யோசித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |