இன்று யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அதிரடியாக இறங்கிய ஆண்டவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சண்டையைக் குறித்து ஆண்டவர் காரசாரமாக பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரம் வீட்டின் தலைவராக யுகேந்திரன் இருந்து வந்தார். ஆனால் சமீப நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கடும் சண்டையை ஏற்படுத்தியதோடு, வீட்டின் கதவும் சுக்குநூறாக உடைக்கப்பட்டது.
இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் கமல்ஹாசன் இன்று போட்டியாளர்களை வெளுத்து வாங்க உள்ளார்.