Ethirneechal: சதி வலையில் ஜீவானந்தம்,பார்கவி- மொத்த பலத்தை இறக்கிய குணசேகரன்
குடும்பமே தர்ஷன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் பார்கவியை ஜீவானந்தம் அழைத்து வருகிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என சிறு சிறு ஆதாரத்துடன் வீட்டில் உள்ள மற்றைய மருமககள்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் அறிவுக்கரசி தன் தங்கையை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க தடபுடலாக தயாராகி கொண்டு வருகிறார்.
இது மற்றைய மருமகள்களுக்கு பிடிக்கவில்லை. இந்த திருமணம் நடந்தாலும் அது அன்புகரசியுடன் இல்லை என ஜனனி புது டுவிட்ஸ்டை கூறியுள்ளார்.
பார்கவியை அழைத்து வரும் ஜீவானந்தம்
தற்போது தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என அறிவுக்கரசி தீவிரமாக இருக்கிறார். ஆனால் ஜனனி இந்த பக்கத்தில் வெறு திட்டத்தை வைத்துள்ளார்.
தர்ஷன் காதலை புரிந்து கொண்ட பார்கவி தர்ஷனை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் தெரிவிக்கிறார். இவர்களை ஒன்று சேர்த்து விட வேண்டும் ஜீவானந்தம் மற்றும் ஜனனி முயற்சி செய்கிறார்கள்.
அதற்காக தான் தற்போது ஜீவானந்தம் பார்கவியை போலிஸிடம் இருந்து காப்பாற்றி கொண்டு வருகிறார். இந்த பக்கம் மற்றைய மருமகள்கள் திருமண மண்டபத்திற்கு செல்கின்றனர். நடப்பதெல்லாம் ஜனனியின் திட்டமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |