பெயர் தெரியாமலேயே ஜீவானந்தத்தை காதலித்த ஈஸ்வரி... எதிர்நீச்சலில் சோகமான காதல் கதை
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி காதல் கதை தற்போது வெளியாகி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
வீட்டில் இருக்கும் பெண்கள் ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க போராடி வரும் நிலையில், ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரியின் சந்திப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் ஜீவானந்தம் ஈஸ்வரி காதல் கதையினை கூறியதுடன், ஈஸ்வரி அவரின் பெயரைக் கூட தெரிந்து கொள்ளாமல் காதலித்துள்ளது தெரியவந்துள்ளது.