Ethirneechal: வெளிநாட்டிற்கு செல்லும் பார்கவி! ஜீவானந்தத்தின் திடீர் முடிவு ஏன்?
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியை வெளிநாடு அனுப்பி வைப்பதற்கு ஜீவானந்தம் ஏற்பாடு செய்துவரும் நிலையில், வீட்டு பெண்கள் குழப்பத்தில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார். பார்கவியை தர்ஷனுக்கு மனைவியாக்க ஈஸ்வரி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி கூட்டம் ஒருவழியாக பார்கவியை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
தற்போது ஜீவானந்தத்தின் பாதுகாப்பில் இருக்கும் பார்கவியை, அவர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க திட்டமிடுகின்றார்.
மற்றொரு புறம் பார்கவி தர்ஷன் திருமணத்திற்கு ஜனனி பத்திரிக்கை அடிப்பதற்கு சென்றுள்ளார். வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் ஜீவானந்தத்திற்கு என்ன ஆச்சு என்ற குழப்பத்தில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |