Ethirneechal: கடைசி நொடியில் பார்கவியுடன் மாஸாக என்ட்ரியான ஜீவானந்தம்... பரபரப்பான ப்ரொமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி மற்றும் ஜீவானந்தம் நீதிமன்றத்திற்கு கடைசி நொடியில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
அதாவது தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில், கடைசியில் திருமணம் நடைபெறாமல் நின்று போயுள்ளது.
இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரின் கூட்டத்தார் பார்கவியின் தந்தையை அடித்தே கொலை செய்துள்ளார்.
இதனால் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு வந்து புகார் அளித்த நிலையில், பார்கவி ஜீவானந்தத்தை வழியிலேயே கொலை செய்ய அறிவுக்கரசி திட்டமிட்டிருந்தார்.
இத்தருணத்தில் கடைசி நொடியில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் பார்கவி மற்றும் ஜீவானந்தம். மேலும் குறித்த கொலைக்கு காரணம் ஞானத்தை பொறுப்பேற்க குணசேகரன் கூறியுள்ளார்.
தற்போது ஞானம் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த ஆட்டத்தை தொடங்க பெண்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |