Ethirneechal: அடிதடியில் இறங்கிய அண்ணன் தம்பிகள்... குணசேகரன் கேட்கும் சத்தியம்
எதிர்நீச்சல் சீரியலில் கடை திறக்கும் நிகழ்விற்கு ஜனனி ஏற்பாடு செய்து வரும் நிலையில், கதிர் வில்லத்தனமாக பழிவாங்குவதற்கு பிளான் செய்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தில் கொடிகட்டி பறந்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தம்பிகளும் குணசேகரன் கூறிய வார்த்தைக்கு தலையை ஆட்டி வரும் நிலையில், தற்போது தம்பிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஞானம் வீட்டு பெண்களுக்கு ஆதரவாக காய் நகர்த்தி வருவதாக கதிர் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் குணசேகரன் செம்பு ஒன்றில் பால் எடுத்து வந்து அதின் மீது சத்தியம் செய்யக் கூறியுள்ளார். ஞானம் பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் தயங்கி நிற்கின்றார்.
மற்றொரு புறம் ஜனனிக்கு ஏதாவது ஆகிவிடுமா? என்ற பயத்தில் சக்தி கடை திறப்பு விழாவினை தள்ளி போடுவதற்கு பேசுகின்றார். ஆனால் ஜனனி வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |