Ethirneechal:சதிவலையில் சிக்கிய ஜனனி - மூவரில் பறிபோக காத்திருக்கும் உயிர்
பார்கவி ஜீவானந்தத்தை காப்பாற்ற செல்லும் வழியில் ஜனனியை கொல்ல குணசேகரன் ஆள் அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
தற்போது எதிர்நீச்சல் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் மட்டும் தான் கெட்டவர்களுக்கு எல்லாம் சாதகமாக நடக்கும்.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குணசேகரனுக்கு தான் வெற்றி கிடைக்கும். தற்போது தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் செய்து வைக்க அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் கதிர் ஞானம் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.
ஆனால் தர்ஷன் பார்கவியை தான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இப்படி இருக்கையில் இந்த திருமணத்தை எப்படியாவது தடுக்க வெண்டும் என்று குணசேகரன் வீட்டு மருமகள்கள் பாடுபடுகின்றனர்.
இதற்கிடையில் பல விடயங்கள் நடந்து முடிந்துவிட்டது. தற்போது ஜனனி பார்கவி ஜீவானந்தம் இருக்கும் இடத்திற்கு தனியே சென்றிருக்கின்றார்.
ஜனனியின் உயிருக்கு வரும் ஆபத்து
ஒருவழியாக ஜனனி ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கண்டுபிடித்து விட்டார். ஆனால் திருமண மண்டபத்தில் குணசகரன் சக்தியிடம் முடிந்தால் ஜனனியின் உயிரை காப்பாற்ற சொல்கிறார்.
இதற்கிடையில் மறுபக்கம் பார்கவி மற்றும் ஜீவானந்தம் ஜனனியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இப்போது ஜனனியை துரத்தும் கும்பல் என்ன செய்ய போகின்றனர் ஜனனி எப்படி தர்ஷன் பார்கவி திருமணத்தை நடத்தி வைக்கப்போகிார் என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |