Ethirneechal: அதிகாரியிடமிருந்து வந்த போன் கால்.. ஆன்லைனில் மருமகள்கள் செய்த காரியம்
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி திருமணத்திற்கு முன்பு தான் சம்பாதித்த பணத்தை மருமகள்களின் தொழிலுக்காக பயன்படுத்துவதற்கு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
ஒருவழியாக மருமகள்களின் நிலையினை அறிந்த விசாலாட்சி மகன் மீது இருக்கும் தவறையும் தெரிந்து கொண்டார். இதனால் போலிசாரிடம் மகனைக் குறித்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
தற்போது மருமகள்கள் ஹோட்டல் தொடங்குவதற்கு வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்து அனைத்து பொருட்களையும் வாங்கியுள்ளனர். மேலும் விசாலாட்சி தான் சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்துள்ளார்.
வீட்டு மருமகள்கள் குஷியில் தனது வேலைகளை செய்து வருகின்றனர். அதிகாரியிடமிருந்து உணவாகத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் தங்களது வேலையினை மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |