ஓடி ஒளியும் குணசேகரன்.. அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள்
எதிர்நீச்சல் சீரியலில் இவ்வளவு நாட்களாக ஆட்டம் காட்டிய குணசேகரன் பொலிஸிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஓடி ஒளியும் காட்சி சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.

சக்தி தான் ராணா என்கிற உண்மையை ஜனனி கண்டுபிடிக்கிறார்.மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் இரண்டு உயிர்களும் மீண்டும் வருமா? என்பதை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஓடி ஒளியும் குணசேகரன் கும்பல்
இந்த நிலையில், சக்தியை மருத்துவமனையில் சேர்த்த ஜனனி வீட்டிற்கு வந்து அறிவுக்கரசியின் கையை உடைக்கிறார். அதன் பின்னர் வீட்டை கோயில் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் விசாலாட்சியிடம் தேவகி தான் இந்த சொத்துகளுக்கு சொந்தகாரி என்ற உண்மையை கூறுகிறார்.
இதனால் மனம் உடைந்து போன விசாலாட்சி, ஒரு பக்கம் மருமகள்களிடம் உண்மைகளை கூறுகிறார்கள்.

ஜனனி கொடுத்த புகார்களுக்கமைய குணசேகரன் கைது செய்வதற்காக பொலிஸார் சுற்றி வலைக்க, குணசேகரன் அவரின் தம்பிகளுடன் ஊரில் இருந்து தப்பிச் செல்கிறார்.
சக்தியும் ஒருவழியாக கண்விழித்து விட்டார். அப்போது ஜனனி,“ நாம் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இதற்கெல்லாம் அறிவுக்கரிசி தான் காரணம் என்ற உண்மையை சக்தியிடம் கூறி விடுகிறார். ஓடி ஒளியும் குணசேகரன் பொலிஸார் கையில் சிக்குவாரா? என்பதை இனி வரும் எபிசோட்களில் காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |