Ethirneechal: இறந்து போன அமுதா... அதிரடியாக கைது செய்யப்பட்ட நந்தினி! பரபரப்பான அப்டேட்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியிடம் வேலைக்கு சேர்ந்த அமுதா உயிரிழந்த நிலையில், ஜனனி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
சக்தியை கடத்தி வைத்த வழக்கில் போலிசார் குணசேகரனை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார்.

ஆனால் வீட்டில் உள்ள பெண்களை தனது தம்பிகளை வைத்து பழிதீர்த்து வருகின்றார். இந்நிலையில் குணசேகரன் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வரவும் உள்ளார்.
இந்த சூழ்நிலையில் எதிர்பாராத திருப்பமாக ஜனனியிடம் வேலைக்கு சேர்ந்த அமுதா உயிரிழந்துள்ளார். இதனால் ஜனனி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது புகைப்பட தொகுப்பு ஒன்று இன்ஸ்டாவில் பதிவிடப்பட்டுள்ளது. அமுதா எப்படி இறந்தார்? என்று தெரியாத நிலையில் கைது செய்யப்பட்ட ஜனனி, போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆவது போன்று கதைகளம் சென்றுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |