Ethirneechal: அடித்து தலைகீழாக தொங்கவிடப்பட்ட சக்தி... குணசேகரனின் காலில் விழுந்து கதறும் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியின் புகைப்படம் ஒன்று ஜனனியின் மொபைலுக்கு வந்த நிலையில், சக்தியைக் காப்பாற்ற குணசேகரனின் காலில் விழுந்து கதறும் காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற பெயரில் வெளியாகி வருகின்றது.
தற்போது குறித்த சீரியலில் கதைகளம் வித்தியாசமாக செல்கின்றது. சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த சீரியலில் பல அதிரடியான டுவிஸ்ட்கள் அரங்கேறியுள்ளது.

சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மையினை தெரிந்து கொண்ட நிலையில், குணசேகரன் சக்தியை தீர்த்து கட்டுவதற்கு விடாமல் துரத்திக் கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் தருணத்தில், எதிரே கார் ஒன்று வரவே இருள் சூழ்ந்த அந்த பகுதியில் வைத்து சக்தி மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.
தற்போது சக்தியினை அடித்து தலைகீழாக தொங்கவிடப்பட்ட புகைப்படம் ஜனனிக்கு கிடைத்துள்ளது. இதனால் ஜனனி குணசேகரனை சட்டையைப் பிடித்து சரமாரியாக பேசியுள்ளார்.
ஆனால் கடைசியாக குணசேகரனின் காலில் விழுந்து கதறி, மன்னிப்பு கேட்டதுடன், சக்தியை விட்டுவிடுங்கள் என்று கேட்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |