குணசேகரனுக்கு எதிராக மாறிய விசாலாட்சி.. சீரியல் முடிவுக்கு வருதா?
எதிர்நீச்சல் சீரியலில் இவ்வளவு நாட்களாக குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த விசாலாட்சி, ஜனனிக்கு சார்பாக மாறியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.

குணசேகரன் ஆட்டத்திற்கு முடிவுக்கட்ட நினைத்த சக்தி தேவகி யார் என்பதை தேடிச் செல்கிறார். ஆனால் குணசேகரன் தன்னுடைய சொந்த தம்பி என்று கூட பாராமல் ஆட்களை வைத்து அவரை கொலைச் செய்ய திட்டம் போடுகிறார். இதனை முறியடித்து ஜனனி மருத்துவமனையில் சக்தியை சேர்க்கிறார்.
குணசேகரன் எதிரான தாய்
இந்த நிலையில், மருத்துவமனையில் கொடுத்த சிகிச்சையால் கண்விழித்த சக்தி வீட்டிற்கு வரும் சமயத்தில் குணசேகரன் பற்றிய உண்மைகளை ஜனனி வீட்டிலுள்ள விசாலாட்சியிடம் கூறி விடுகிறார்.
தன்னுடைய மகனுக்காக இவ்வளவு காலமாக அமைதியாக இருந்த விசாலாட்சி குலுங்கி குலுங்கி அழுகிறார். குணசேகரன் செய்தவற்றை ஜனனியிடம் கூறி விட்டு, சக்திக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

இந்த சமயத்தை பயன்படுத்த நினைக்கும் ஜனனி, பொலிஸ் அதிகாரிகளை வரவழைத்து குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சியிடம் வாக்குமூலம் எடுக்கிறார்.
முதலில் தயங்கினாலும் மனசாட்சியை மதித்து முதல் தடவையாக விசாலாட்சி உண்மைகளை கூறுகிறார். இந்த காட்சியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “ சீரியல் முடிவுக்கு வருகிறதா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ஸ்பெஷல் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |