Ethirneechal: கலெக்டரை வைத்து குணசேகரன் அடுத்த திட்டம்... வஞ்சகம் பழிக்குமா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு உதவி செய்யும் கலெக்டருக்கு வேறுவிதமாக பிரச்சனை கொடுத்து ஜனனியை பழிவாங்க குணசேகரன் திட்டமிட்டுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்து, கடைசியாக ஹோட்டலையும் திறந்துள்ளனர். ஆனாலும் குணசேகரன் பல வழிகளில் அதனை தடுப்பதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், அனைத்தும் தோல்வியே அடைந்தது.

இந்நிலையில் ஜனனிக்கு கலெக்டர் ஒருவர் அறிமுகமாகி உள்ள நிலையில், அவருக்கும், குணசேகரன் தற்போது தங்கியிருக்கும் இடத்தின் உரிமையாளருக்கும் பிரச்சனையை கிளப்பிவிடுகின்றார்.
இதனை வைத்து மீண்டும் ஜனனியை பழிவாங்குவதற்கு திட்டமிட்ட நிலையில், குணசேகரன் நினைப்பது நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |