காணாமல் போன குணசேகரன்... மீண்டும் வில்லியாகிய விசாலாட்சி! எதிர்நீச்சலில் பரபரப்பான திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டில் உள்ள சூழ்நிலையால் மனம் வெறுத்து குணசேரகன் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவரது தாய் மீண்டும் வில்லியாக மாறியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சீரியலிலிருந்தும் நிரந்தரமாக சென்ற குணசேகரனை நினைத்து பார்வையாளர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வில்லியாக மாறிய தாய்
குணசேகரனைக் குறித்து அவரது தம்பிகள் பலரிடமும் விசாரித்து வரும் நிலையில், அனைவரின் நடிப்பும் பார்வையாளர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது.
குணசேகரன் எப்பொழுது வருவார்? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது வெளியான ப்ரொமோ பதில் அளித்துள்ளது. குறித்த ப்ரொமோ காட்சியில் ஜான்சிராணி மீண்டும் வீட்டிற்குள் வரும் நிலையில், நந்தினி இது எப்பொழுதும் அவர் செய்யும் நாடகம் தானே? என்று அப்பத்தாவிடம் கூற, அப்பத்தா... இந்தமுறையும் குணசேகரன் திரும்பிவருவான்... ஆனால் ஆபத்தானவனாக வரப்போகிறான் என்று கூறியுள்ளார்.
ஜான்சிராணி இங்கே இருக்கட்டும் என்று கூற, நந்தினி கண்டதை எல்லாம் வீட்டுக்குள்ள தங்க வைப்பீங்களா என கேட்கிறார். அதற்கு விசாலாட்சி கோவமாக கண்டவளுங்க கூட கூத்தடிச்சு தான், இன்னைக்கு என் பிள்ளை தொலைச்சிட்டு நிற்கிறேன் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |