குணசேகரன் இல்லாமல் தர்ணாவில் தம்பிகள்... அடிக்க வந்த அப்பத்தாவை எதிர்த்த தர்ஷன்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமல் பல குளறுபடிகள் அரங்கேறி வருவது பார்வையாளர்களை சலிப்படைய வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
குணசேகரன் இல்லாமல் இழுத்துக் கொண்டு சென்ற எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி குணசேகரனாக என்ட்ரி ஆனார். ஆனால் சில நாட்கள் காட்சிக்கு மட்டுமே வந்த அவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் காவல்நிலையத்தில் அவரைக் காணவில்லை என்பதால், நீதிபதி வீட்டிற்கு அவரது சென்றுள்ளனர். அங்கிருந்து சிறைக்கு சென்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மற்றொரு புறம் வீட்டில் ஈஸ்வரியை அவரது மாமியார் சரமாரியாக பேசி வருகின்றார். இதற்கு பிள்ளைகள் இருவரும் எதிர்த்து பேசியதுடன் அடிக்க வந்த கையை தடுத்தும் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |