Ethirneechal: சமையலில் கலக்கும் விசாலாட்சி... மலை உச்சிக்கு சென்ற குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் மருமகள்களின் ஹோட்டல் தொழிலுக்கு விசாலாட்சி முழு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தனது சமையல் ரகசியத்தையும் மருமகள்களுக்கு கற்றுக் கொடுக்க போகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றார்.

தனக்கு தெரிந்த சமையல் ரகசியங்களை மருமகள்களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார். போலிசாருக்கு பயந்து காரில் ஊர்சுற்றிக் கொண்டிருந்த குணசேகரன் தற்போது மலை உச்சியில் தலைமறைவாகியுள்ளார்.
இன்னும் சில தினங்களில் கடை திறப்பு விழா ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், குணசேகரன், கதிர் இருவரும் சேர்ந்து என்ன திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெரியாமல் இருக்கின்றது.
ஆனால் விசாலாட்சியின் அண்ணன் கூறிய வாக்கு குறித்து பார்த்தால், இனி குணசேகரன் வீட்டிற்கு வரமாட்டார் என்பது தெரிகின்றது. அவரது நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |