Bigg Boss: அடுத்தடுத்து உள்ளே வரும் உறவினர்கள்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் 10 பேர் வரும் வாரத்தில் நாமினேஷனில் தெரிவாகியுள்ளனர்.
கம்ருதின் இந்த வார கேப்டனாக இருந்து வரும் நிலையில், வரும் நாட்களில் போட்டிகளும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வர ஆரம்பித்துள்ளார். இது இந்த வாரம் டாஸ்க்காகவும் செல்கின்றது.
அதாவது போட்டியாளர்களின் உறவினர்கள் யாருடையவர்கள் வந்துள்ளனர் என்பதை மெயின் கதவு வழியாக காட்டிவிடுவார் பிக்பாஸ். பின்பு அவர் கொடுக்கும் டாஸ்க்கை முடித்துவிட்டு உறவுகளை பார்க்க செல்ல வேண்டும் என்பதே.

இதில் சாண்ட்ரா தனது மகள் கணவரை பார்த்த போது கதறி துடித்துள்ளார். பின்பு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை முடித்துவிட்டு உச்சக்கட்ட பாசத்துடன் வந்து குழந்தைகளை கட்டி அணைத்துள்ளார்.


பின்பு கனி வீட்டிலிருந்து உறவினர்கள் வந்துள்ளனர். கனியின் பிள்ளைகளை காட்டிய பிக்பாஸ் பின்பு பிஸ்கட் சாப்பிடும் டாஸ்க்கை கொடுத்துள்ளார். அவரும் தனது பாசத்தினை பிள்ளைகள் மீது காட்டி கதறி அழுதுள்ளார்.

இதே போன்று வினோத் தனது குடும்பத்தினை பார்த்தவுடன் உடைந்து அழுதுள்ளார். உடனே ஓடிச் சென்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை முடித்துவிட்டு வந்து குழந்தைகளை கொஞ்சியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உறவினர்கள் தங்களது போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். வினோத் மனைவி கோபப்படாதே... வீட்டு வந்த பின்பு உனக்கு அடி இருக்குது என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |