கைமாறிய ஆதாரம்.. மொத்தமாக தோற்றுபோன ஜனனி- இன்னொரு நபர் யார்?
குணசேகரன் பற்றிய வீடியோ ஆதாரங்கள் பணத்திற்காக கை மாறி, ஜனனிக்கும் சக்திக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பான கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய கௌரவத்திற்காக மனைவியையே கொல்ல துணிந்த குணசேகரன் உண்மை முகத்தை ஈஸ்வரி காணொளியாக பதிவு செய்து வைத்திருந்தார்.
ஈஸ்வரி மருத்துவமனைக்கு சென்ற பின்னர் அந்த ஆதாரத்தை அறிவுக்கரசி வைத்திருந்தார். குணசேகரனிடம் உண்மை கூறிய அறிவுக்கரசியை கோர்த்து விடும் நோக்கில் ஆதாரத்தை வாங்கி குணசேகரன் ஆள் ஒருவரிடம் கொடுத்து விட்டார்.
ஆனாலும் அந்த ஆதாரங்களின் இன்னொரு நகல் ஜனனி, சக்தி இருவரின் கைக்கு வரும் என எதிர்ப்பார்த்த வேளையில், மூன்றாவதாக உள்ளே வந்த நபர் ஒருவர் ஆதாரங்களை பணம் கொடுத்து வாங்குகிறார்.
கதையை மாற்றப்போகும் அந்த நபர் யார்?
இந்த நிலையில், சக்தி கையில் இருக்கும் கடதாசியில் ஆதிக்குணசேகரன் மாத்திரம் குடும்பம் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வாசித்த நந்தினியும், ரேனுகாவும், “ அப்படியானால் இன்னொருவர் இந்த குடும்பத்தில் இருக்கிறார்..” என்பதை கண்டுபிடிக்கிறார். கதைக்குள் வந்து ஆதிக்குணசேகரனை ஆடி வைக்கப்போகும் அந்த இரண்டாவது நபரை காண சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இரண்டாவதாக கதைக்குள் வரும் நபர் மருமகள்களுக்கு ஆதாரவாக நிற்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் என்ன தான் பார்கவி- தர்ஷன் சண்டை போட்டு திருமணம் செய்தாலும், அவர்கள் இன்னும் கணவன்- மனைவியாக வாழ ஆரம்பிக்கவில்லை.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |