கம்பீரமாக நின்ற குணசேகரன் கதறியழுத சோகம்... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம்வரும் குணசேகரன் தனது சொத்தை நினைத்து கதறியழுத சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், ஜனனி பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். கடைசியில் ஏற்பட்ட மோதலில் குணசேகரனை அலுவலகத்திலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.
தற்போது காவல்நிலையம் வரை இந்த பிரச்சினையில், நியாயம் கிடைக்காமல் குணசேகரன் சோகமாக கோவிலில் சென்று அமர்ந்துள்ளார்.
பின்பு ஜனனியால் கைவிட்டுப் போன சொத்து மீண்டும் ஜனனியால் கைப்பற்றப் போவதாக குணசேகரன் வீட்டிற்கு திரும்பி, வீடடைப் பார்த்து கதறியழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |