மீண்டும் காணாமல் போன குணசேகரன்... இனி வரமாட்டாரா? கதையில் திடீர் மாற்றம்
எதிர்நீச்சல் சீரியலில் கெத்து காட்டி காவல் நிலையத்திற்கு சென்ற குணசேகரன் மீண்டும் காணாமல் போயுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி நடித்துவரும் நிலையில், இவரது என்ட்ரி பயங்கரமாக இருந்தது. அதிலும் வந்த வேகத்தில் ஈஸ்வரியை பளார் பளார் என்று தாக்கியதோடு, குடும்பத்தையே நடுநடுங்க வைத்துள்ளார்.
இனி குணசேகரன் வரமாட்டாரா?
இந்நிலையில் குறித்த சீரியலில் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்ட குணசேகரனை சிறையில் பார்த்த போது காணாமல் போனது போன்று கதையை கொண்டு செல்கின்றனர்.
குறித்த காட்சியில் பொலிசார் அழைத்துச் செல்லும் முன்பு குடும்பத்தை கதிர் மற்றும் ஞானம் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்.
நான் அவர்களை வழிநடத்துவேன் என்று சூசகமாக பேசியதை வைத்து மீண்டும் குணசேகரன் வெளியேறியுள்ளதாகவும், இவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருப்பதால் தற்சமயம் வந்துவிட்டு சென்றுள்ளார்.
இவர் சீரியலுக்கு வரும் முன்னே கால்ஷீட் பிரச்சினை இருப்பது பற்றி கூறியதால், தற்போது அதனாலே வெளியே சென்றுள்ளார் என்றும் கதையையும் மீண்டும் காணாமல் சென்றதாக கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |