Ethirneechal: வெளியே வரும் குணசேகரன்... வீட்டிற்கு வந்துள்ள இந்த பெண் யார்?
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவை மீண்டும் ஞானம் கொடுமை செய்து வரும் நிலையில், வீட்டிற்கு புதிதாக பெண் ஒருவர் வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் அப்படியே குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.
ஞானத்தின் மனதை குழப்பி ரேணுகாவிற்கு எதிராக திருப்பியுள்ளார். குணசேகரனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாகவும், வெளியே வரவுள்ளதாகவும் தர்ஷனின் வருங்கால மாமியார் கூறியுள்ளார்.
தற்போது வீட்டிற்கு புதிதாக பெண் ஒருவர் வந்துள்ள நிலையில், இவர் தர்ஷனின் காதலியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |