Ethirneechal: கண் விழித்த ஈஸ்வரியை கொல்ல திட்டமிடும் கதிர் .... வைரலாகும் ப்ரோமோ
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் ஈஸ்வரியை கொலை செய்வதற்கு திட்டமிடும் நிலையில், மருத்துவமனையில் ஈஸ்வரி கண்விழிக்கவும் செய்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
குணசேகரன் ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்துள்ள நிலையில், இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால் குணசேகரன் ஜனனியை குற்றவாளியாக்கி அவரை கைது செய்யவும் வைத்துள்ளார். ஆனால் ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார்.
தற்போது அறிவுக்கரசியிடம் ஆதாரம் இருப்பதை கண்டுபிடித்த மருமகள்கள் போனை உடைத்துள்ளார். மேலும் கதிர் ஈஸ்வரியை கொலை செய்வதற்கு துணிந்துள்ளார்.
மருத்துவமனையில் படுக்கையிலிருந்து பகீரென எழுந்து ஈஸ்வரி அமர்ந்திருக்கின்றார். ஈஸ்வரி வெளியே கூப்பிடுவதற்கு முயற்சி செய்கையில், தர்ஷினி தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றார்.
கதிரின் சூழ்ச்சி நிறைவேறுமா? கண்விழித்த ஈஸ்வரியின் அடுத்த நிலை என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
