Ethirneechal: செருப்பால் அடி வாங்கிய கதிர்... மீண்டும் வீட்டிற்குள் வரும் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் நபர் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், கடன் கொடுத்தவர் கதிரை செருப்பால் அடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு இடையே மாட்டிக் கொண்ட பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்து வெளியே வருவது போன்ற காட்சி அமைந்தது.
இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த நடிகைகளில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மட்டும் மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள காட்சியில் இதுவரை கம்பீரமாக வலம்வந்த கதிர் செருப்பால் அடி வாங்கியுள்ளார். புதிய குணசேகரனாக மாறுவதற்கு அவரது மாமா கூறியுள்ளார்.
வீட்டிற்கு வராமல் இருந்த ஈஸ்வரி தற்போது வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ஞானம் மற்றும் கதிர் மரியாதை இல்லாமல் பேசி அவரை பேசி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |