ஈஸ்வரி சீரியலில் இருந்து விலகி விட்டாரா? பதில் கொடுத்த இயக்குநர்
பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஈஸ்வரி சீரியலில் இருந்து விலகிவிட்டாரா? என்ற கேள்விக்கு இயக்குநர் பதில் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் நினைக்கும் கணவர்மார்களை எதிர்த்து மனைவிகள் செய்யும் போராட்டத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் நகர்த்தப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இருந்து சக்தியை திருமணம் செய்து குணசேகரன் வீட்டிற்குச் செல்லும் ஜனனி தான் இந்த சீரியலின் கதாநாயகியாக இருக்கிறார்.
ஈஸ்வரிக்கு என்னாச்சு?
இந்த நிலையில், ஈஸ்வரி தன்னுடைய மகனின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக கடைசியாக தன்னுடைய கணவரிடம் பேசலாம் என்ற முடிவுடன் அறைக்குள் செல்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஈஸ்வரியை அடித்து அவரை மயக்கமடைய வைக்கிறார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஈஸ்வரியை நந்தினியும் தர்ஷனும் இணைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். மருத்துவமனைக்கு சென்ற பின்னர் தர்ஷினி தன்னுடைய அம்மாவை மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
இந்த எபிசோட்கள் சீரியலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது,“ஈஸ்வரி சீரியலை விட்டு விலகி விட்டார்..” என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த செய்தி யாரும் பதில் கொடுக்காத நிலையில் செய்திகள் பல கோணங்களில்வெளியாக சின்னத்திரை ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
இயக்குநர் விளக்கம்
இதற்கு விளக்கம் கொடுத்த இயக்குநர், “சீரியலில் இருந்து ஈஸ்வரி கதாபாத்திரம் போகவில்லை. அப்படி போனால் கூட அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கப்படும். ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகாவிற்கும் சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் குடும்பம் உள்ளது. அதையும் அவர் பார்க்க வேண்டும். சின்னத்திரை ரசிகர்களுக்காக கதையை மாற்ற முடியாது. மாறாக வதந்திகளுக்கு நடிகை சார்பிலும் விளக்கம் வரவில்லையென்றால் இது வதந்தி தான்..” என பேசியிருக்கிறார்.
இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், ஈஸ்வரி சீரியலில் இனி இல்லை என்ற வதந்தி முடிவுக்கு வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
