Ethirneechal: இந்த ட்ராமா பண்ற வேலையை வச்சிக்காத... ஈஸ்வரியை மோசமாக நடத்தும் தர்ஷன்
எதிர்நீச்சல் சீரியலில் சிறையிலிருந்தே தர்ஷனுக்கு திருமண ஏற்பாடுகளை குணசேகரன் செய்து வரும் நிலையில், இது குறித்து தர்ஷனிடம் ஈஸ்வரி பேச சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கதிருக்கு கைமாறியுள்ளது.
சொத்தை பெற்றுக் கொண்ட கதிர் ஆணவத்தில் ஆட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், புதிய பிரச்சனையையும் குணசேகரன் வீட்டிற்கு அனு்பபியுள்ளார்.
குணசேகரன் தர்ஷனுக்கு பெண் வீட்டினரை அனுப்பி வைத்துள்ள நிலையில், அவர்கள் வீட்டில் தட்டு மாற்றவும் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஈஸ்வரி தர்ஷனிடம் பேச வந்துள்ள நிலையில், தர்ஷன் ஈஸ்வரியை மிகவும் மோசமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |