Ethirneechal: ஒரே அறையில் தர்ஷன் பார்கவி... அன்புக்கரசி செய்த மோசமான காரியம்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் யாருக்கும் தெரியாமல் பார்கவியை சந்தித்ததை அறிந்த அன்புக்கரசி இருவரையும் ஒரே அறையில் பூட்டி வைத்துவிட்டு தனது அக்காவை அழைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் பார்கவியின் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஞானம் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
தர்ஷனை அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் கூட்டம் பயங்கரமாக திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் ஈஸ்வரியும் தனது மகனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தர்ஷன் பார்கவியை தனி அறையில் சென்று சந்தித்துள்ளார். இதனை அன்புக்கரசி அறிந்து கொண்ட நிலையில், உடனே தனது அக்காவிற்கு போன் செய்து, தர்ஷன் தன்னை ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.
தற்போது தர்ஷன் பார்கவி இருவரும் ஒரே அறையில் உள்ள நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் பிரச்சனை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
