இறந்து போன மனைவியின் ஆசையை நிறைவேற்றிய பிரபலம்! என்ன செய்திருக்கிறார்?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தன்னுடைய காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளதாக உருக்கமாக கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.
இவரது கணவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
ஜான்வி சினிமாவில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார், இந்நிலையில் போனிகபூர் 26 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.
அத்துடன் முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார், இதெல்லாம் அவரது மனைவி ஸ்ரீதேவியின் ஆசைக்காக தானாம்.
இதுகுறித்து அவர், எடையை குறைத்து, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என என் மனைவி அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பார்.
அதெல்லாம் எதற்கு? என நினைத்துக்கொள்வேன், இப்போது என் மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்.
அவருக்கு பிடித்த மாதிரி மாறிவிட்டேன், ஆனால் அவர் இல்லை என உருக்கமாக பேசியுள்ளார்.