Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா?
தர்ஷன் திருமணத்திற்கு வேலைப்பாடுகளை அறிவுக்கரசி தடபுடலாக செய்து வரும் சமயத்தில் அவரை திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண் அன்புக்கரிசி இல்லை என ஜனனி புது பயத்தை உண்டுபண்ணியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது.
இதனை தெரிந்து கொண்ட வீட்டு பெண்கள், அறிவுக்கரசியை பிடித்து அவரை அடித்து அவரிடம் உள்ள தொலைபேசியை பறித்து எடுக்கும் முயற்சியில் கடந்த எபிசோட்களில் இறங்கியிருந்தார்கள். ஆனால் அறிவுக்கரசி தொலைபேசியை உடைத்து ஆதாரங்களை தற்போதைக்கு வெளியில் கொண்டு வர முடியாமல் செய்துள்ளார்.
இவர் இப்படி செய்யும் சமயத்தில் ஈஸ்வரி கண்முழிக்கிறார். இந்த விடயம் மருமகள்கள் மற்றும் தர்ஷினியை தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது என பெண் போலீஸ் அதிகாரி வலியுறுத்துகிறார்.
கடுப்பாக்கி அழகு பார்க்கும் ஜனனி
இந்த நிலையில், தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என அறிவுக்கரசி தீவிரமாக இருக்கிறார்.
அப்போது தர்ஷன் காதலை புரிந்து கொண்ட பார்கவி தர்ஷனை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் தெரிவித்து விட்டார். எப்படியாவது இவர்களை ஒன்று சேர்த்து விட வேண்டும் ஜீவானந்தம் மற்றும் ஜனனி முயற்சி செய்கிறார்கள்.
பார்கவிக்கு புடவை வாங்கிக் கொண்டு வரும் ஜனனியிடம் யாருக்கு என அறிவுக்கரசி கேட்கிறார். அதற்கு ஜனனி,“தர்ஷன் திருமணம் செய்யப்போகும் பெண்ணிற்கு..” என்கிறார். அத்துடன் நிறுத்தாமல் மணப்பெண் பார்கவி தான் என்ற உண்மையையும் கூறுகிறார்.
உச்சக்கடுப்பில் இருக்கும் அறிவுக்கரசி, கதிர், குணசேகரன் மூவரும் சேர்ந்து என்ன செய்வார்கள் என்பதை இனி வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
