ஜீவானந்தம் தந்தையாக இருந்தால்? குணசேகரன் பிள்ளைகளால் எழுந்த பிரளயம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 17ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவர் மறைந்த பின்பு ரிவியில் வந்த அவரது குரல் மற்றும் காட்சியை அவதானித்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர். கடந்த நாளில் குணசேகரன் வராமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் மாஸ் எண்ட்ரி கொடுத்துளளார்.
தற்போது இன்றைய ப்ரொமோ காட்சியில் தர்ஷனுக்கு புதிய இருசக்கர வாகனத்தை ஈஸ்வரி வாங்கிக் கொடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆண்களும் வெறித்து பார்க்கின்றனர்.
அடுத்து குணசேகரனின் பிள்ளைகள் ஜீவானந்தம் போன்று ஒரு தந்தை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்த தர்ஷனை மீண்டும் தாக்க முயற்சிக்கும், கொழுந்தனை ஈஸ்வரி சரமாரியாக திட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |