ஒரு வழியாக தர்ஷனை வலைத்து போட்ட அன்புக்கரசி.. அப்போ இனி பார்கவியின் நிலை?
எதிர்நீச்சல் சீரியல் அன்புக்கரிசி ஒரு வழியாக தர்ஷனை வலைத்து போட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில், தர்ஷன் திருமணத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் வந்தன. ஆனாலும் கடைசியாக தர்ஷன் அவருடைய காதலியான பார்கவியை கரம்பிடித்து விட்டார்.
இதற்கிடையில், அறிவுக்கரசி- குணசேகரன் செய்த அனைத்து குற்றங்களும் அனைவருக்கும் தெரியவருகிறது.
குணசேகரனின் வீராப்புக்கு ஆதரவாக நின்று தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என போராடிய அறிவுக்கரசி கொலை பலியுடன் சிறைக்கு போய் விட்டார்.

அடுத்து, வீட்டிற்கு வந்த குணசேகரன் அலுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்குள்ள ஆதாரங்களை சக்தி எடுத்து விட்டார்.
அன்புக்கரசி உடன் டூயட்
இந்த நிலையில், வீட்டிற்கு வந்த புது மருமகளை வைத்து தல தீபாவளி தர்ஷன் கொண்டாடுகிறார்.
திருமண ஆசையில் இருந்த அன்புக்கரசிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கோபமான அன்புக்கரசி, “ உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டேன்..” என சாபம் விட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
அதன் பின்னர், குணசேகரன் ஆட்டத்திற்கு பகடைக்காயாக பயன்படுத்தப்படும் அன்புக்கரசி குணசேகரன் வீட்டில் இருக்கிறார். அங்கு புதிதாக திருமணமான பார்கவி மற்றும் தர்ஷன் இருவரும் இருக்கிறார்கள். ஆனாலும் தர்ஷனனை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அன்புக்கரசி சூழ்ச்சிகளை செய்து வருகிறார்.
இப்படியொரு சமயத்தில் தர்ஷன் உடன் ஜோடியாக அன்புக்கரசி டூயட் ஆடும் காணொளியொன்று சின்னத்திரை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ தர்ஷனனுக்கு கதையில் இரண்டு மனைவியா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |