Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம்
திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் குணசேகரன் தற்போது திருமணம் நடக்கும் நேரத்தில் கை வைக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
புதிய திருப்பமாக ஈஸ்வரியை குணசேகரன் கொலைச் செய்த காட்சி மூன்றாவது நபர் ஒருவருக்கு தெரியவருகிறது. அவர் சரி கொலையை வெளியில் காட்டிக் கொடுப்பார் என பார்த்த வேலையில் அவரும் அறிவுக்கரசியுடன் இணைந்து கொள்கிறார்.
எங்க காதல சேர்த்து வைங்க..
இந்த நிலையில், பார்கவி- தர்ஷன் திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என ஜீவானந்தம் தன்னுடைய உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு துணையாக ஜனனியும் இருக்கிறார்.
மாறுவேடத்தில் இருக்கும் நந்தினியை அறிவுக்கரிசியின் தம்பி காதலிப்பதாக புது கதையை உருவாக்கி, சக்தியிடம் நன்றாக வாங்கிக் கொள்கிறார்.
இப்படி பல திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கும் கதையில் திருமண நேரத்தை மாற்றி குணசேகரன் புதிய திருப்பம் கொடுத்துள்ளார்.
இதை கேட்ட தர்ஷன், “ ஏன் நேரத்தை மாத்துறீங்க,” என கேட்க அதற்கு குணசேகரன், “ நேரத்தை மாற்றினால் மாப்பிள்ளை திருமணம் செய்யமாட்டீர்களா?” என நக்கலாக பதில் கூறுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |