Ethirneechal:தடபுடலாக நடக்கப்போகும் திருமணம் - பக்காவா திட்டம் போடும் ஜீவானந்தம்
ஒருவழியாக கல்யாண மண்டபத்திற்கு பார்கவியை ஜனனி மற்றும் ஜீவானந்தம் அழைத்து வந்து விட்டனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் தொடரில் இன்னும் தர்ஷன் திருமணத்திற்கு ஒரு முடிவு காணாமல் அப்படியே எபிசோட் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஈஸ்வரி இன்னும் சுயநலனுக்கு திரும்பாமல் அப்படியே மருத்துவமனையில் இருக்கிறார்.
இதை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காமல் தர்ஷனுக்கு அம்மா இல்லை என்றாலும் பரவாயில்லை என்று குணசேகரன் அவர் பிடிவாதத்திற்கு அறிவுக்கரசியுடன் சேர்த்து கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.
இதற்கு தடபுடலாக திருமணம் மண்டபத்தில் நடக்க நலங்கு நடந்துகொண்டு இருக்கிறது. இத்தனையும் இருக்க பல தடைகளை தாண்டி ஜனனி ஒரு வழியாக ஜீவானந்தம் மற்றும் பார்கவியை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
பார்கவியை அழைத்து வந்த ஜனனி
கல்யாண மண்டபத்தில் அன்புக்கரசியுடன் சிறப்பாக நலங்கு தர்ஷனுக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பக்கம் பார்கவி ஜீவானந்தத்தை ஒரு வழியாக பல தடைகளை தாண்டி ஜனனி திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
இதில் ஜனனிக்கே தெரியாத ஒரு டிவிஸ்டை ஜீவானந்தம் கூறுகிறார்.
அதாவது பார்கவிக்கு தர்ஷனை திரமணம் செய்ய வேண்டும் என்றால் அத மண்டபத்தில் முடியாது மண்டபத்தில் இருந்து தர்ஷன் வெளியே வெருவதற்கு ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று ஜனனியிடம் கூறுகிறார். ஆனால் காணொளியில் ஜனனி அதிர்ச்சியாகிய படி முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |