ஈஸ்வரியை அசிங்கமாக பேசும் அன்புக்கரசி.. வீட்டில் வெடித்த கலவரம்- ஹனிமூன் போவார்களா?
சீரியலில், ஈஸ்வரியை அசிங்கமாக பேசி அன்புக்கரசி, தர்ஷன்- பார்கவியின் ஹனிமூன் கொண்டாட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
வீட்டிற்கு வாழ வந்த பெண்களை அடக்கி ஆழ நினைத்த குணசேகரன் அதற்காக பல வேலைபாடுகளை செய்து வந்தார். அவருக்கு அவரின் தம்பிகளும் அம்மாவும் துணையாக இருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் மருமகள்களை அடக்க முடியாத குணசேகரன் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுது அடுத்தடுத்து புதுபுது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.

மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார். மாடியில் வீட்டு பெண்கள் அனைவரும் இருந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி பேசியதை கரிகாலன் கேட்டு விடுகிறார்.
அதனை குணசேகரனிடம் கேட்க ஓடிய பொழுது தலையில் அடிப்பட்டு ஆதிரையை பற்றிய ஞாபகங்கள் வந்து விடுகிறது.
ஈஸ்வரியின் நடத்தையை விமர்சிக்கும் அன்பு
இந்த நிலையில், பெண்களை திசைத்திருப்புவதற்காக வீட்டுக்குள் வரவழைக்கப்பட்ட அன்புக்கரசி எப்படியாவது பார்கவியை பிரித்து விடலாம் என திட்டங்களை போட்டு வருகிறார்.
கடைசியாக புதிதாக திருமணமான தம்பதிகளை பெங்களூருக்கு அனுப்ப திட்டம் போடுகிறார் ஜனனி, இந்த விடயம் கரிகாலன் மூலம் குணசேகரனுக்கு தெரியவர அவர் மற்றுமொரு புதிய திட்டம் பற்றி பேசுகிறார்.

அதன் பின்னர், வீட்டிற்கு நடுவில் நின்றுக் கொண்டு ஈஸ்வரியின் நடத்தை குறித்து அன்புக்கரசி மிகவும் மோசமாக பேசுகிறார். இவற்றையெல்லாம் பொருத்துக் கொள்ள முடியாத தர்ஷினி, அன்புக்கரசியை அடிக்கச் செல்கிறார். ஹனிமூன் கொண்டாட்டம் கைக் கூடி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |