Siragadikka Aasai: அம்பலமாக போகும் ரோகினியின் உண்மை! வெளியே கசிந்த புகைப்படம் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் உண்மை அம்பலமாக இருப்பது போன்று கதை சென்று கொண்டிருக்கின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாக எடுத்துக்காட்டும் கதையைக் கொண்டுள்ளது.
மகனை வெறுக்கும் தாய், அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் மகன் என்ற கதையும் சென்றுள்ளது. மேலும் வீட்டிற்கு பணக்காரி என கொண்டு வந்த மருமகள் அவ்வாறு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ரோகினி முதல் திருமணம் செய்து ஒரு மகன் இருப்பதும் யாருக்கும் தெரியாமல் உள்ளது. இந்நிலையில் ரோகினியின் உண்மை வெளியே வருவது போன்று கதை செல்கின்றது.
ஏனெனில் ரோகினியின் முதல் கணவரின் அண்ணன் மற்றும் அண்ணன் மனைவி ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் திவ்யாவின் கையில் புகைப்படம் ஒன்றும் சிக்கியுள்ளது. இதனால் ரோகினியின் உண்மை தற்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |